பிப்ரவரி 26-ஆம் தேதி புத்தகம் இல்லா தினம் கடைப்பிடிக்கப்படும் என்பதால் மாணவர்களின் செலவுக்காக ஒரு கோடி ரூபாயை பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கி உள்ளது.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26-ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
அன்றைய தினம் மாடி தோட்டம் மூலிகை தாவர வளர்ப்பு பாரம்பரிய கலைகள் குறித்த பயிற்சியும் மாணவர்களுக்கு சிற்றுண்டியும் வழங்கப்படும் என்றும் இதற்காக ரூபாய் ஒரு கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.