பெண் ரோபோவை நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலைக்கு அமர்த்திய சீன தொலைக்காட்சி
சீனாவில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் முதன்முறையாக ரோபோ ஒன்றை நிகழ்ச்சி தொகுப்பாளராக அமர்த்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக இனி வரும் காலங்களில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு வேலை இல்லாமல் போகும் நிலை உருவாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சீனாவில் பிரபலமான டிவி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது சாங்காய் டிராகன் டிவிஇந்த டிவியில் வழக்கமாக வானிலை அறிவிப்புகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு செயற்கை அறிவு கொண்ட பெண் ரோபோ ஒன்று நிகழ்ச்சி தொகுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ரோபோவானது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஜியாவோல்ஸ் எனும் ஸ்மார்ட் கிளவுட் மற்றும் பின் டேட்டா சாப்ட்வேரை கொண்டு இயங்குகிறது. அழகான பெண் குரலில் வானிலை அறிவிப்புகளை மனிதர்களை போலவே துல்லியமாக ஏற்ற இறக்கத்துடன் வாசிக்கிறது. இது பெரும்பாலான நேயர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது மட்டுமின்றி அவர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
சாங்காய் டிராகன் டிவி: சீனாவின் மிகப் பிரபலமான இந்த டி வி நிறுவனம், வானிலை தொடர்பான அறிவிப்புக்களை நேரடியாக ஒளிபரப்பு செய்து வருகிறது.இந்த அறிவிப்புக்களை வழக்கமாக நிகழ்ச்சி தொகுப்பாளரே அறிவித்து வந்த நிலையில்,தற்போது,செயற்கை அறிவு கொண்ட பெண் ரோபோ ஒன்றை நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகப்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்த டி வி நிறுவனம்.
இந்த ரோபோவானது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஜியாவோல்ஸ் எனும் ஸ்மார்ட் கிளவுட் மற்றும் பின் டேட்டா சாப்ட்வேரை கொண்டு இயங்குகிறது. அழகான பெண் குரலில் வானிலை அறிவிப்புகளை மனிதர்களை போலவே துல்லியமாக ஏற்ற இறக்கத்துடன் வாசிக்கும் இந்த ரோபோவை சீன நாட்டு மக்கள் மிக ஆர்வத்துடன் கண்டு களிக்கின்றனர்.
மைக்ரோசாப்ட்டின் இந்த சாப்ட்வேர் ஏற்கனவே எழுத்துக்களில் இருந்து பேச்சு வடிவில் மாற்றுவதில் இயற்கையான மனிதர்களை போலவே இயங்கும் அபார சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் இருக்கும் யூனிக் எமோஷனல் தொழில்நுட்பம் உடனடியாக எதையும் பேச்சு வடிவில் துல்லியமாக மாற்றக்கூடிய வல்லமை வாய்ந்தவை.
இவ்வாறு ரோபோக்களைக் கொண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினால்,நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
Female Robot have appointed as a TV anchor in China