யூடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் அதிர்ச்சி
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் யூ டியூப் வீடியோ தளத்தின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்றிரவு ஊழியர்கள் பணியில் இருந்தபோது திடீரென ஒரு மர்ம பெண் நள்ளிரவு 12.45 மணியளவில் அலுவலகத்துக்குள் நுழைந்து தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கு இருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டாள்.
இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. பணியில் இருந்த ஊழியர்கள் உயிர் பிழைக்க அங்கிருந்து தப்பி அலுவலகத்தை விட்டு வெளியேறி தெருக்களில் ஓடினார்கள். பலர் அலுவலகத்தின் அருகேயுள்ள வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்தனர். யூ டியூப் அலுவலகத்தை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டனர்.
அங்குள்ள அறையில் அந்த பெண் கொலையாளி பதுங்கி இருக்கிறாளா? என்று அறிய போலீசார் சோதனை செய்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய பெண் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்
இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் காயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்திய பெண்ணின் காதலர் என்று கூறப்படுகிறது. இந்த துப்பாக்கி சூடு குறித்து கலிபோர்னியா போலீசார் விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்