முஸ்லீம் மாநாட்டில் திடீரென மேடையேறிய அரைநிர்வாண பெண்கள். பாரீஸில் பரபரப்பு
[carousel ids=”71822,71823,71824,71825,71826″]
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெற்ற முஸ்லிம்கள் மாநாடு ஒன்றில் திடீரென இரண்டு பெண்கள் மேடையேறி மேலாடையின்றி போராட்டம் நடத்தியதால் மாநாட்டு குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பெமைன் (Feman) என்ற அமைப்பை சேர்ந்த பெண்கள் உலகின் பல பகுதிகளில் திடீர் திடீரென மேலாடையின்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாரீஸ் நகரில் நடைபெற்ற முஸ்லிம்கள் மாநாட்டில் இஸ்லாம் மதம் சார்ந்த அறிஞர்கள், பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவியரை அடிக்க கணவர்களுக்கு உரிமை உண்டா? என்ற தலைப்பில் விவாதம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. இந்த சம்யத்தில் திடீரென இரண்டு பெண்கள் மேலாடையின்றி மேடையேறி அங்கு பேசிக்கொண்டிருந்தவரின் மைக்கைப் பிடுங்கி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டு மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். அந்த இரு பெண்களும் பெமைன் என்ற பெண்கள் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
‘யாரும் என்னை அடக்க முடியாது, அடிமைப்படுத்த முடியாது’ என்ற கோஷத்துடன் போராட்டம் செய்த அந்த பெண்களை உடனடியாக விரைந்து வந்த பாதுகாவலர்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அப்போது, மாநாட்டு அமைப்புக் குழுவைச் சேர்ந்த சிலர் அந்தப் பெண்களை அடித்து, உதைத்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.