கேரள உரங்கள் மற்றும் ரசாயனத் தயாரிப்பு நிறுவனமான FACT நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16 ஆம் தேதி நடைபெறும் எழுத்துத் தேர்வில் நேரில் கலந்துகொள்ளலாம்.
பணி: Technician
காலியிடங்கள்: 30
தகுதி: சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், கெமிக்கல் ஆகிய பொறியியல் படிப்புகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 23-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Trade Apprentice
காலியிடங்கள்: 76
தகுதி: வெல்டிங், எலக்ட்ரீசியன், கார்பென்டர் ஆகிய படிப்புகளில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 23-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பதவிகளுக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கத் தேவையில்லை.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாளில் அசல் சான்றிதழ் மற்றும் அதன் நகல் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.fact.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தேர்வு நடைபெறும் தேதி: 16.01.2016