டைட்டானிக் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் திடீர் மரணம்.

james hornerடைட்டானிக், அவதார் போன்ற உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் கார்னர் நேற்று நடைபெற்ற விமான விபத்து ஒன்றில் பலியானார். அவருக்கு வயது 61.

டைட்டானி, பிரேவ் ஹார்ட், அவதார், கமாண்டோ, போன்ற வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த ஜேம்ஸ் ஹார்னர் நேற்று சிறிய ரக விமானம் ஒன்றில் அமெரிக்காவில் உள்ள சாந்தா பார்பரா என்ற பகுதியில் இருந்து 60 மைல்கள் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் ஜேம்ஸ் ஹார்னர் அவர்களும், விமானியும் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஜேம்ஸ் ஹார்னரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், விமானியின் உடல் தேடப்பட்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றது.

ஐந்து வயதில் இருந்தே பியானோ வாசிக்க கற்று கொண்ட ஜேம்ஸ் ஹார்னர், கடந்த 1980ஆம் ஆண்டு முதல் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் இரண்டு முறை ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply