மது அருந்தும் காட்சி இருந்தால் ‘ஏ’ சர்டிபிகேட் தான். சென்சார் அதிரடி
இனிமேல் மது அருந்தும் காட்சி உள்ள அனைத்து படங்களுக்கும் ஏ சான்றிதழ் வழங்கப்படும் என்று மத்திய திரைப்பட தணிக்கை அமைப்பின் தலைவர் பஹ்லாஜ் நிஹலானி கூறியுள்ளார்.
திரைப்படங்களில் மது அருந்தும் காட்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வருகிறது. அதே சமயத்தில் சமூகத்தில் குடிபோதைக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. டாஸ்மாக் விற்பனையும் உயர்ந்தபடியே உள்ளது.
இந்நிலையில், இனிமேல் மது அருந்தும் காட்சி உள்ள அனைத்து படங்களுக்கும் ஏ சான்றிதழ் வழங்கப்படும் என்று மத்திய திரைப்பட தணிக்கை அமைப்பின் தலைவர் பஹ்லாஜ் நிஹலானி கூறியுள்ளார்.
பெயருக்கு மது அருந்துவது, புகைபிடிப்பது தவறு என்று ஒரு மூலையில் போட்டால் மட்டும் போதாது என்றும் அவர் கூறியுள்ளார்.