சிம்புவின் ‘கான்’ படம் டிராப்? தனுஷ் காரணமா?

சிம்புவின் ‘கான்’ படம் டிராப்? தனுஷ் காரணமா?
khaan
சிம்பு நடித்த படங்கள் ரிலீஸ் ஆனதை விட அவர் நடிப்பதாக ஒப்புக்கொண்டோ அல்லது ஒருசில நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டோ டிராப் ஆன படங்கள்தான் அதிகம் என்கிறது கோலிவுட் வட்டாரங்கள். சிம்பு நடிப்பதாக இருந்த கெட்டவன், வாலிபன், வேட்டை மன்னன், வடசென்னை ஆகிய படங்கள் ஏற்கனவே டிராப் ஆகியுள்ள நிலையில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘கான்’ திரைப்படமும் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

‘கான்’ படத்தை யாரும் தயாரிக்க முன்வராததால், செல்வராகவனே தனது சொந்த முயற்சியில் ரூ.1 கோடி செலவு செய்து 17 நாட்கள் ‘கான்’ பட ஷூட்டிங்கை நடத்தினார். இந்நிலையில் வேறு யாராவது தயாரிப்பாளர் இந்த படத்தில் இணைந்து கொள்வார் என செல்வராகவன் எதிர்பார்த்த நிலையில், யாருமே ‘கான்’ படத்தில் முதலீடு செய்ய தயாராக இல்லை.

இந்நிலையில் இந்த படத்தை டிராப் செய்துவிட்டு தனது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவருமாறு தனுஷ் ஆலோசனை சொன்னதாகவும், தம்பியின் ஆலோசனையை ஏற்று செல்வராகவன் ‘கான்’ படத்தை டிராப் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே படப்பிடிப்பு முடிவடைந்த ‘இது நம்ம ஆளு’ படத்தையே ரிலீஸ் செய்ய முடியாமல் சிம்பு தவித்து வரும் நிலையில் ‘கான்’ பட டிராப் செய்தி அவரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Leave a Reply