சம்பளம் தர முடியாமல் திணறுகிறதா ஆந்திர அரசு?
சமீபத்தில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சியின் அரசு, ஊழியர்களுக்கு சம்பளம் கூட போட முடியாத அளவுக்கு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திர அரசில் பணியாற்றும், 7.9 லட்சம் ஊழியர்களில், 22 ஆயிரம் பேர், மார்ச் மாத சம்பளத்தை, இன்னும் பெற முடியாமல் உள்ளதாவும் கூறப்படுகிறது.
கடும் நிதி நெருக்கடி மற்றும் சாப்ட்வேர் பிரச்னையால், கடந்த மாதம், குறித்த நாளில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழக்கமான நாளில் சம்பளம் தரப்படவில்லை. என்றும் இதுகுறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
இது குறித்து, ஆந்திர நிதித் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியபோது மத்திய அரசு தரவேண்டிய நிதியுதவி காலதாமதமாகி வருவதால், ஆந்திர அரசின் நிதி இருப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தத்தில், 8,000 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு, பல்வேறு காரணங்களை கூறி நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த பிரச்னையை சமாளிக்கும் வகையில், மத்திய அரசுக்கு எதிராக, 20ம் தேதி, உண்ணாவிரதம் இருக்க சந்திரபாபுநாயுடு முடிவு செய்துள்ளதாக ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.