நிதியாண்டு ஏப்ரலில் இருந்து ஜூனுக்கு மாற்றமா?
கொரோனா வைரஸ் எதிரொலியாக உலகமே பல்வேறு நடவடிக்கைகளை மாற்றி வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்தியாவில் நிதியாண்டு குறித்த மிகப் பெரிய மாற்றம் கொரோனா வைரஸ் காரணமாக நிகழ்ந்துள்ளதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா முழுவதும் மிகத்தீவிரமாக இருப்பதை அடுத்து ஏப்ரல் மாதம் நிதியாண்டின் தொடக்கமாக இருந்த நிலையில் தற்போது அது மாற்றப்படுவதாகவும், கொரோனா பாதிப்பு காரணமாக நிதியாண்டு தொடக்கத்தை ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதமாக மத்திய அரசு மாற்றி யுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் நிதியாண்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் வழக்கம்போல் ஏப்ரல் முதல் தேதி தான் நிதியாண்டின் தொடக்கம் என்றும் இதுகுறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது