இந்தியர்களுக்கு வேலையா? கூகுள் நிறுவனத்தின் கிளவுட் பிரிவின் தலைவர் கூறுவது என்ன?

இந்தியர்களுக்கு வேலையா? கூகுள் நிறுவனத்தின் கிளவுட் பிரிவின் தலைவர் கூறுவது என்ன?

கூகுளின் ஒரு பிரிவு கூகுள் கிளவுட் என்பது தெரிந்ததே. இதன் தலைவர் ஓய்விண்ட் ரோடி என்பவர் சமீபத்தில் இந்தியர்களுக்கு வேலை கொடுப்பது குறித்து கூறியதாவது:

இந்தியாவில் ஒரு வேலைக்கு உரிய சரியான நபரை தேர்வு செய்வது என்பது மிகவும் சவாலான காரியம். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே இது முக்கியமான பிரச்னையாக உள்ளது. இந்தியாவில் புதிது புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகின்றன. அவை மாறுப்பட்ட விதத்தில் பொருட்களை உற்பத்தி செய்ய முயற்சி செய்வதே நான் மீண்டும் மீண்டும் இந்தியா வருவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இயந்திரத்திற்கு கற்பித்தல் மற்றும் பகிரமைப்புத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் திறன் மிக்கவர்களுக்கான தேவை உலக அளவில் அதிகமாகவே உள்ளது. அந்த தேவை இந்தியர்களால் பூர்த்தி ஆகும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply