டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்.

shastri_bhavan_fire_360டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வரும் சாஸ்திரி பவனில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மத்திய அரசு அலுவலகங்களில் முக்கிய மற்றும் ரகசிய பைல்கள் பாதுகாக்கப்பட்டு வரும் சாஸ்திரி பவனில் புதிய அரசு பதவியேற்க இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் சந்தேகம் கிளம்பி உள்ளது.

சாஸ்திரி பவனின் 7வது மாடியில்தான் மத்திய அரசின் முக்கிய பைல்கள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும். மோடி அரசு வரும் 24ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

தீவிபத்து குறித்ததகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் 9 தீயணைப்பு வண்டிகளுடன் வந்து தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதங்கள் குறித்த உடனடியான தகவல் வெளியாகவில்லை.

Leave a Reply