சீனா: பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஐபோன் ஆலையில் பயங்கர தீவிபத்து.

சீனா: பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஐபோன் ஆலையில் பயங்கர தீவிபத்து.

foxconnஉலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான பாக்ஸ்கான் என்ற நிறுவனத்தின் சீன நாட்டு கீலையில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

பாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுமத்தின் பிரதான ஐபோன் தயாரிப்பு ஆலை வளாகம் சீனாவில் உள்ள செங்க்சோ என்ற நகரில் உள்ளது. இந்த நிறுவனத்தின் குளிர் சாதன இயந்திரத்தின் விசிறியில் பற்றிய தீ பின்னர் காற்றோட்டத்திற்காக உள்ள குழாய்கள் வழியாக மளமளவென ஆலை முழுவதும் பரவியது. இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக ஆலை வளாகத்தில் இருந்த தீயணைப்பு அதிகாரிகள் மிகுந்த சிரமத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தால் உயிர் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று பாக்ஸ்கான் குழுமம் இன்று தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply