டெல்லி தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து
தலைநகர் டெல்லியில் இயங்கி வரும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாள்தோறும் பிசியாக இருக்கும் டெல்லி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கட்டிடத்தின் தரைதளத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து உடனடியாக தீயணைப்பு மீட்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படவீரர்கல் தற்போது தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் தீ விபத்தை அடுத்து அலுவலகத்தில் இருந்த தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி பாதுகாப்பாக அலுவலக கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் உள்பட யாருக்கும் இந்த தீ விபத்தினால் காயம் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தமிழக சட்ட அமைச்சர் சிவி சண்முகம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வந்து சசிகலா தரப்பிலான 1,.50 லட்ச பக்கங்கள் கொண்ட ஆவணத்தை தாக்கல் செய்தார்.
https://www.youtube.com/watch?v=DzCDaoxckUY