சென்னை அடுத்தடுத்து தீ விபத்து. பெரும் பரபரப்பு
சமீபத்தில் சென்னையில் தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கடையில் தீவிபத்து ஏற்பட்டு கோடிக்கணக்கான பொருள்கள் நஷ்டமடைந்த நிலையில் அடுத்தடுத்து சென்னையின் பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை சில்க்ஸ் கடையின் அருகில் உள்ள ஓட்டல், அமைந்தகரையில் உள்ள ஒரு மால் ஆகியவற்றில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் நேற்று மதியம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கலர் லேப் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து சென்னை எழும்பூரில் உள்ளடி.ஜி.பி அலுவலக வளாகத்திலும் நேற்று தீ விபத்து ஏற்பட்டஅது. இந்த விபத்தால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 10 வாகனங்கள் தீயில் கருகியது.
இந்த வளாகத்தில் டிஜிபி அலுவலகம் தவிர மத்திய, மாநில அரசு அலுவலங்கள் அமைத்துள்ளது. மேலும் இங்கு கல்வி துறை அலுவகமும் இடம்பெற்றுள்ளது. கல்வி துறை அலுவலகம் இயங்குவதால் இங்கு மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீ விபத்தால் எந்தவித தஸ்தாவேஜ்களுக்கும் சேதமில்லை என்று கூறப்படுகிறது.