திருப்பதி-திருமலை மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ.

tirumalaதிருப்பதி சேஷாலம் பகுதியில் ஏற்பட்ட வனத்தீ இரண்டாவது நாளாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. காற்று மிக அதிகமாக வீசுவதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்து வருகின்றனர்.

நேற்று செவ்வாய் கிழமை திருப்பதி – திருமலை பகுதியில் பார்வேட்டி மண்டபம் மற்றும் பாபவிநாசம் ஆகிய பகுதிகளில் மதியம் திடீரென காட்டுப்பகுதியில் உள்ள மரங்களில் தீப்பிடித்தது. அந்த நேரத்தில் காற்று மிக வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. பலகோடி மதிப்புள்ள மரங்கள் தீயில் கருகின. வனவிலங்குகளும் பறவைகளும் கூட்டம் கூட்டமாக இறந்து கிடந்தன.

காட்டுத்தீ மிகவேகமாக பரவிவருவதால் தீயை அணைப்பது குறித்து தீயணைப்புத் துறையினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திராவின் பல பகுதியில் இருந்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மேலதிகாரி ஜி.ஸ்ரீனிவாஸ் தீப்பிடித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்து வருகிறார்

Leave a Reply