தடை செய்யப்பட்ட போனுக்கு மாற்று போன் அளிக்க விசேஷ பூத். சாம்சங் நிறுவனம் ஏற்பாடு
சமீபத்தில் வெளியான சாம்சங் கேலக்ஸி 7 மாடல் அதிநவீன போன் திடீர் திடீரென வெடித்து விபத்துக்களை உருவாக்கியதால் இந்த மாடல் போனுடன் விமானத்தில் பயணம் செய்ய பயணிகளுக்கு இந்தியா உள்பட பல நாடுகள் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி 7 மாடல் போன திரும்ப பெற்று வரும் சாம்சங் நிறுவனம், தென்கொரிய தலைநகர் சியோல் விமான நிலையத்தில் விசேஷ பூத் ஒன்றை அமைத்துள்ளது.
தென்கொரியாவில் இருந்து வெளிநாடு செய்யும் பயணிகளிடம் சாம்சங் கேலக்ஸி 7 மாடல் போன் இருந்தால் இந்த பூத்தில் கொடுத்து அதற்கு பதிலாக மாற்று போனை பெற்று கொள்ளலாம்.
விரைவில் உலகில் உள்ள முக்கிய விமான நிலையங்களிலும் இந்த விசேஷ பூத்தை அமைக்க சாம்சங் திட்டமிட்டுள்ளது.