வேலூர் பட்டாசு கடையில் தீ விபத்து: 3 பேர் பலி

வேலூரில் நடந்த பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

இன்று காலை வேலூரில் உள்ள பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசு கடை உரிமையாளர் மற்றும் அவரது இரண்டு பேரக்குழந்தைகள் உயிரிழந்தனர்

மேலும் கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகின. இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்

இந்த விபத்தின் சேத மதிப்பு குறித்து கணக்கிடப்பட்டு வருவதாகவும் இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன

Leave a Reply