கொல்கத்தாவில் இந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி

கொல்கத்தாவில் இந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி

eden gardenடெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு கடந்த சில வருடங்களாக ரசிகர்களிடம் ஆதரவு குறைந்து வருவதால் டெஸ்ட் போட்டிகளின் ஆர்வத்தை அதிகரிக்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் முதன்முதலாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது. இதற்கு ரசிகர்களிடம் நல்ல ஆதரவு இருந்ததை அடுத்து உலகின் முக்கிய நகரங்களில் இதேபோல் பகல்-இரவு போட்டி நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது முதன்முதலாக இந்தியாவிலும் பகல்-இரவு போட்டியை நடத்தப்படவுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு போட்டி பகலிரவு போட்டியாக நடத்தப்படவுள்ளதாகவும் அதற்கு முன்னோடியாக இந்தியாவின் உள்ளூர் தொடரான சூப்பர் லீக் இறுதிப்போட்டியை பகல்- இரவு போட்டியாக நடத்த மேற்கு வங்காள கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த போட்டி வருகிற 17ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நான்கு நாட்கள் இந்த போட்டி நடைபெறும். இதன்மூலம் இந்தியாவில் முதல் பகல்- இரவு டெஸ்ட் போட்டியை நடத்தும் மைதானம் என்ற பெருமையை கொல்கத்தா ஈடன் கார்டன் பெறுகிறது.

Leave a Reply