இந்தியாவின் முதல் எலக்ட்ரானிக் பேருந்து. பெங்களூரில் சோதனை ஓட்டம்.

இந்தியாவின் முதல் எலக்ட்ரானிக் பேருந்து நேற்று கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவின் முதல் எலக்ட்ரானிக் பேருந்தை ரூ.2.7 கோடி ரூபாயில் தயார் செய்யப்பட்டு அது பெங்களூரில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பேருந்து செயல்பட டீசல் தேவையில்லை. இதிலுள்ள பிரமாண்டமான பேட்டரியை ஆறு மணிநேரம் சார்ஜ் செய்தாலே போதும். ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 250 கிலோமீட்டர் வரை ஓடும் செயல்திறனை இந்த பேருந்து பெறும்.

இந்த பேருந்தை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் பாயிண்ட் பெங்களூருவின் மெஜஸ்டிக் பகுதியில் மட்டுமே உள்ளது. நேற்று முதல் சோதனை ஓட்டம் நடத்தப்படும் இந்த எலக்ட்ரானிக் பேருந்து மெஜஸ்டிக்கில் இருந்து கடுகோடி வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் செல்ல டிக்கெட் கட்டணம் ரூ.80 ஆகும். விரைவில் இந்த பேருந்து மெஜஸ்டிக்கில் இருந்து விமான நிலையம் வரை இயக்கப்படும் என தெரிகிறது.

Leave a Reply