தைவான் நாட்டின் முதல் பெண் அதிபர் பதவியேற்பு

தைவான் நாட்டின் முதல் பெண் அதிபர் பதவியேற்பு

taiwanஆசிய நாடுகளில் ஒன்றான தைவான் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கட்சியைச் சேர்ந்த சாய் இங்-வென் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் தைவான் நாட்டின் முதல் பெண் அதிபராக சாய் இங்-வென் நேற்று பதவியேற்று கொண்டார்.

தைவான் தேர்தலை அண்டை நாடான சீனா உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில் புதிய அதிபராக பொறுப்பேற்ற சாய் இங்-வென் சீனாவுடன் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிக்க தைவான் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

பழைய கசப்பான வரலாறுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இருநாட்டு மக்களின் நன்மைக்காக நேர்மறையான பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டியது அவசியம் என்றும் புதிய அதிபர் கூறினார்.

தங்களிடம் இருந்து பிரிந்து தனி நாடாக உருவான தைவானை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. ஒரு நாள் தாய்பூமியுடன் இணைக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் படைபலத்தை பிரயோகித்து இணைப்போம் என்றும் சீனா அவ்வப்போது மிரட்டல் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த தேர்தலில் தோல்வி அடைந்த ஆளுங்கட்சியின் வேட்பாளர் எரிக் சு தோல்வியடைந்தார். மேலும், தோல்வியை ஒப்புக்கொண்டு தனது கட்சி தலைமை பொறுப்பை ராஜினா செய்தார்.

Leave a Reply