மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில். நவம்பர் 10 முதல் இயங்கும்.

VBK-12-GATIMAAN_2150159fஇந்தியாவின் அதிவேக ரயில், டெல்லி – ஆக்ரா இடையே  வரும் நவம்பர் 10 ஆம் தேதி முதல்  இயங்கும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்று கூறப்படுகிறது.

இந்த அதிவேக ரயிலில் மொத்தம் 14 பெட்டிகள் இருக்கும் என்றும், இந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் பஞ்சாப் மாநிலம் கபூர்தலா  ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து கபூர்தால ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலையின்   பொது மேலாளர் பிரமோத் குமார் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் “டெல்லி - ஆக்ரா இடையே அதிவேக ரயில் எதிர்வரும் நவம்பர் 10 ஆம் தேதி  முதல்  இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்காகவே ஸ்பெஷலாக ரயில் பெட்டிகளை தயாரித்தோம். இந்த ரயிலின் ஒரு பெட்டியை தயாரிக்க ரூ.2 கோடி முதல் ரூ.2.5 கோடி வரை செலவானது. மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில்  நவீன முறையில் மிகவும் பாதுகாப்பான பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்த ரயில் டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு வெறும் 99 நிமிடங்களில் சென்றுவிடும் என கூறப்படுகிறது. இந்த ரயிலுக்கு காட்டிமான் எக்ஸ்பிரஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply