கர்ப்பத்தை தடுக்க இனி ஆணுறை தேவையில்லை. அமெரிக்க விஞ்ஞானிகளின் அதிசய கண்டுபிடிப்பு

கர்ப்பத்தை தடுக்க இனி ஆணுறை தேவையில்லை. அமெரிக்க விஞ்ஞானிகளின் அதிசய கண்டுபிடிப்பு
no condom
தேவையில்லாத கர்ப்பத்தை தவிர்க்கவும், பால்வினை நோய் வராமல் தடுக்கவும் பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஆணுறைதான். ஆணுறையின் அவசியத்தை அரசு மற்றும் தனியார் அமைப்புகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் ஆணுறை அணிந்தும் 18% கர்ப்பம் உண்டாகிறது என்றும், தரமற்ற ஆணுறைகளால் அதன் நோக்கம் செயல்படாமல் போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வந்தன.

இந்நிலையில் ஆணுறை இல்லாமல் கர்ப்பத்தை தவிர்க்கும் புதிய வழிமுறைகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்டீரின் அல்மாலிக் ஆசிட் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து ஒன்று சிறந்த கருத்தடை மருந்தாக செயல்படுவதாகவும் இந்த மருந்தை முயல்களுக்கு கொடுத்து சோதனை நடத்தியதில் நல்ல ரிசல்ட் கிடைத்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மருந்தை பயன்படுத்தும்போது இனப்பெருக்க ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அதன் மூலம் ஆண் விந்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை மிக குறைவாகி ஆண் உயிரணுவால் கருத்தரிக்க செய்ய முடியாதபடி செயல்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொள்ளலாம். இது ஒரு வருடத்திற்கு வேலை செய்யும்.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் ரொனால்ட் கூறும்போது, இதை மனிதனுக்கு பயன்படுத்துவது சம்மந்தமாக இன்னும் சில ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியது உள்ளது. அதன்பிறகு இதை மனிதன் பயன்பாட்டுக்கு அனுப்பி வைப்போம். இது நல்ல செயல்பாடுகளை தருகிறது. முயல்களுக்கு கொடுத்து பரிசோதித்த போது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக பயனை கொடுத்தது என்றார்.

Leave a Reply