விஜய்யின் ‘தெறி’க்கு வந்த திடீர் சிக்கல்?
விஜய் படம் என்றாலே விஜய்யுடன் சேர்ந்து பிரச்சனைகளும் இணைந்து நடிக்கும் என்பது கடந்த சில வருடங்களாக பார்த்து வரும் உண்மை. கடந்த திமுக ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் அவருடைய ஒவ்வொரு படத்தின் ரிலீஸின்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டு படக்குழுவினர்களுக்கு சிக்கலை கொடுத்து வருகிறது.
இந்நிலையில் நேற்று வெளியான ‘தெறி’ படத்தின் டைட்டிலுக்கும் தற்போது பிரச்சனை கிளம்பியுள்ளது. தமிழன் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே ‘தெறி’ என்ற தலைப்பில் ஒரு திரைப்படத்தை தயாரித்து வருவதாகவும், இந்த டைட்டில் முறைப்படி தயாரிப்பாளர் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலால் விஜய்யின் ‘தெறி’ குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எனவே வழக்கம்போல விஜய்யின் இந்த படத்திற்கும் டைட்டில் வடிவில் பிரச்சனை ஆரம்பித்துவிட்டதாகவும், இந்த பிரச்சனையை விஜய் தரப்பினர் எப்படி தீர்ப்பார்கள் என்பதை அறியவும் கோலிவுட் எதிர்பார்ப்பில் உள்ளது.