தென்னிந்தியாவின் முதல் பெண் டாக்சி டிரைவருக்கு ஜனாதிபதி கொடுத்த விருது
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை செய்த பெண்களுக்கு ‘முதல் பெண்மணிகள் சாதனையாளர் விருது’ என்ற விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது, அந்த வகையில் இந்த ஆண்டு இந்த சாதனை விருதினை இந்தியாவின் பல மாநிலங்களில் சாதனை புரிந்த 112 பெண்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களில் ஒருவர் பெங்களூரை சேர்ந்த செல்வி
பெங்களூரை சேர்ந்த செல்வி 14 வயதிலேயே கட்டாய திருமணம் செய்யப்பட்டு பின்னர் கணவரின் கொடுமைகளுக்க்கு ஆளானவர். பின்னர் 18 வயதில் கணவரை சட்டபூர்வமாக பிரிந்து டாக்சி டிரைவராக பணியில் அமர்ந்தார். தென்னிந்தியாவின் முதல் டாக்சி டிரைவர் என்ற பெருமையை பெற்ற இவர் தனது அயராத உழைப்பால் இன்று ஒரு டாக்சி நிறுவனத்திற்கு உரிமையாளராக உள்ளார். இவருக்கு ஜனாதிபதி இன்று விருதினை அளித்து கெளரவித்தார்.
இவரை பற்று கனடாவை சேர்ந்த ஒரு ஆவணப்பட இயக்குனர் ‘டிரைவிங் வித் செல்வி’ என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.