100 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவில் தெரிந்த முழு சூரிய கிரகணம்
நேற்று உலகம் முழுவதும் பல நாடுகளில் சூரிய கிரகணம் தெரிந்த நிலையில் அமெரிக்காவில் 100 ஆண்டுகளுக்கு பின்னர் முழு சூரிய கிரகணம் தெரிந்தது. இந்த கிரகணத்தை மில்லியன் கணக்கானோர் கண்டு ரசித்தனர்.
1918ஆம் ஆண்டு தான் அமெரிக்காவில் கடைசியாக தெரிந்த முழு சூரிய கிரகணம். இதனையடுத்து நேற்று அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் சூரிய கிரகணம் தெரிந்தது. ஒருசில மாகாணங்களில் மட்டும் மேகமூட்டம் காரணமாக கிரகணத்தை பொதுமக்கள் பார்க்க முடியவில்லை
இருப்பினும், நாசா இணையதளத்தில் கிரகணக் காட்சிகள் நேரலையாக பல இடங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அடுத்த முழுமையான சூரிய கிரகணம் 2019-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி ஏற்படவுள்ளது.