சீனா இங்கிலாந்து இடையே 7500 மைல்களுக்கு சரக்கு ரயில் போக்குவரத்து
உலகிலேயே மிக நீண்ட தூர ரயில் பயணமாக சீனா – இங்கிலாந்து இடையேயான ரயில் பயணம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் இருந்து சீனாவுக்கு நேரடியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சரக்கு ரயிலில் விஸ்கி, குளிர்பானங்கள், வைட்டமின்கள், மருந்துகள் உட்பட பல இங்கிலாந்து பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு ரயில் சேவையை துவங்கியுள்ளது. இந்த ரயில் 17 நாட்களில் 7,500 மைல்கள் பயணம் செய்து சீனாவின் புகழ்பெற்ற மொத்த சந்தை நகரமான யுவூ நகருக்கு இந்த பொருட்களை இந்த ரயில் கொண்டு செல்லும்.
பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, போலந்து, ரஷ்யா, கஜகஸ்தான் ஆகிய 7 நாடுகள் வழியாக தனது பயணத்தை இந்த சரக்கு ரயில் தொடர்கிறது. இந்த சேவை ஏர்வேஸ், கப்பல் வழி போக்குவரத்தை விட வேகமாகவும் குறைந்த கட்டணத்திலும் பொருட்களை அனுப்ப உதவியாக இருக்கும் என இருநாட்டு அரசாங்கமும் தெரிவித்துள்ளது