சுமார் 120 கிலோ எடையுள்ள பிரமாண்ட மீன் ஒன்றை இத்தாலி நாட்டை சேர்ந்த மீனவர் ஒருவரிடம் பிடிபட்டுள்ளது. இந்த மீனை பார்ப்பதற்காக அந்த பகுதியில் உள்ளவர்கள் பெரும் ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர்.
இத்தாலியில் உள்ள போடெல்டா என்ற பகுதியை சேர்ந்த டினோ பெராரி என்ற மீனவர் சமீபத்தில் மீன்பிடிக்க கடலில் சென்றபோது 2.67 மீட்டர் நீளமும் 8 அடி 9 இன்ச் அளவுள்ள பிரமாண்ட மீன் சிக்கியது. அவர் அந்த மீனை கரைக்கு கொண்டு வந்ததை பார்த்ததும் அந்த பகுதியில் உள்ளவர்கள் பெரும் ஆச்சர்யம் அடைந்தனர். இதற்கு முன்பே 9 அடி நீளமுள்ள ஒரு மீன் ஏற்கனவே இதே பகுதியில் பிடிபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒரே ஒரு மீன் பிடிபட்டதன் மூலம் அவர் அந்த பகுதியின் செல்வந்தராக மாறும் அளவுக்கு இந்த மீன் அதிக விலைபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மீனை அந்த பகுதியில் உள்ளவர்களும், இத்தாலி நாட்டிற்கு சுற்றுலா பயணிகளாக வந்தவர்களும் கூட்டம் கூட்டமாக பார்த்து அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து வருகின்றனர்.