மாயமான தமிழக, கேரள மீனவர்கள் பத்திரமாக உள்ளனர். மகாராஷ்டிரா முதல்வர்

மாயமான தமிழக, கேரள மீனவர்கள் பத்திரமாக உள்ளனர். மகாராஷ்டிரா முதல்வர்

ஓகி புயல் காரணமாக சுமார் 1000 தமிழக, கேரள மீனவர்கள் மாயமான நிலையில் இரு மாநிலங்களிலும் பதட்டம் அதிகரித்தது. காணாமல் போன மீனவர்களை மீட்க கடற்படையினர் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தேடப்பட்டனர்.

இந்த நிலையில் புயலால் மாயமான கேரள தமிழகத்தை சேர்ந்த 952 மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், 66 கேரளா படகுகள், 2 தமிழக படகுகள் பத்திரமாக மஹாராஷ்டிர கடற்கரைக்கு வந்தடைந்துள்ளதாகவும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தகவல்அ தெரிவித்துள்ளார். இந்த தகவல் மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் மத்தியில் நிம்மதியை தந்துள்ளது.

மேலும் 20 படகுகளில் மீன்பிடிக்கச்சென்ற தமிழக மீனவர்கள் உட்பட 173 மீனவர்கள் லட்சத்தீவில் பாதுகாப்பாக உள்ளனதாகலட்சத்தீவு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply