இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கையால் விடுதலை. டெல்லியில் 5 மீனவர்கள் உருக்கம்

fishermenதூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களும் நேற்று இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து டெல்லி வந்து சேர்ந்தனர். நேற்று பிற்பகல் மீனவர்கள் 5 பேரும் மாலை சுமார் 5.45 மணி அளவில் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தபோது அவர்களை அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் சில சம்பிரதாய நடவடிக்கைகள் இருப்பதால், மீனவர்கள் 5 பேரும் டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் 5 பேரையும் பிரதமர் மோடியோ அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாவோ சந்திக்கும் திட்டம் எதுவுமில்லை என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய 5 மீனவர்களும், ” எங்களது விடுதலைக்கு உதவிய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சே ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் 5 பேருக்கும் இரு நாட்டு தலைவர்களும் மறுவாழ்வு அளித்துள்ளனர். எங்களுக்கு மரண தண்டனை கிடைத்த அந்த ஒரு நாள் மட்டுமே நாங்கள் மிகவும் சோகமாக இருந்தோம். ஆனால் மறுநாள் முதல் இந்திய அதிகாரிகள் சாப்பிடாமல் கூட பரபரப்பாக எங்களது விடுதலைக்கு பாடுபட்டதாக எங்களுக்கு செய்திகள் வந்தன.

அதே போல், இந்திய தூதரக அதிகாரிகளும் எங்களுக்கு தைரியம் அளித்தனர். சாவின் விளிம்பில் இருந்த எங்களுக்கு, இந்தியாவின் மிகச்சிறந்த ராஜதந்திர நடவடிக்கை காரணமாக விடுதலை கிடைத்துள்ளது. விரைவில் எங்களது குடும்பத்தினரை சந்திக்க ஆவலாக உள்ளோம். இந்தியா, இலங்கை இரு நாட்டு உறவுகள் தொடர வேண்டும். இரு நாட்டு மக்களும் சந்தோஷமாக வாழ வேண்டும்” என்று கூறினர்.

Leave a Reply