உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஐந்து இந்திய பெண்கள்

உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஐந்து இந்திய பெண்கள்
women
உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியல் ஒன்றை பிரபல பத்திரிகையான ஃபோபர்ஸ் எடுத்தது என்றும் அதில் மைக்ரோசாப்ட் நிறுவனம்ர் பில்கேட்ஸ் 17 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார் என்பதையும் பார்த்தோம். இந்நிலையில் இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பெண்கள் இடம்பெற்றுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் உலக அளவில் 190 பெண்கள் இருந்தாலும் இந்திய அளவில் ஐந்து பெண்கள் மட்டுமே உள்ளனர். அவர்களின் விபரம் குறித்து தற்போது பார்ப்போம்.

1. ஜிண்டால் குழுமத் தலைவர் சாவித்திரி ஜிண்டால் உலக அளவில் 453-ஆவது இடத்தைப் பிடித்து இந்த பட்ட்டியலில் இடம்பெற்றுள்ளார்.. இவரது சொத்து மதிப்பு ரூ.23 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

2. பென்னட் கோல்மேன் குழுமத்தின் நிர்வாகத் தலைவரான இந்து ஜெயின் உலக அளவில் 549-ஆவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி ஆகும்.

3. கோத்ரெஜ் குழுமத் தலைவர் ஸ்மிதா கோத்ரெஜ் உலக அளவில் 810-ஆவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடி

4. யுஎஸ்வி நிறுவனக் குழுமங்களின் தலைவர் லீனா திவாரி உலக அளவில் 1,067-ஆவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.12 ஆயிரம் கோடி ஆகும்.

5. ஹேவெல்ஸ் குழுமத் தலைவர் வினோத் குப்தா, இப்பட்டியலில் உலக அளவில் 1,577-ஆவது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 7 ஆயிரம் கோடி ஆகும்.

Leave a Reply