இயக்குனர் ஷங்கர் ஒருவழியாக தனது ‘ஐ’ படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார். ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் ‘ஐ’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என ஷங்கர் தரப்பில் இருந்தும், ஆஸ்கார் ரவிச்சந்திரன் தரப்பில் இருந்தும் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம், விஷாலின் ஆம்பள திரைப்படமும் ஆகியவற்றின் ரிலீஸும் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இன்று காலை சென்னையின் அனைத்து இடங்களிலும் கார்த்தியின் ‘கொம்பன்’ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை திரைப்படமும் ரிலீஸாகவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரே நேரத்தில் ஐந்து பெரிய படங்கள் ரிலீஸ் ஆவதால் தியேட்டர்களை புக் செய்வதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஷங்கருக்கு நெருக்கமான பழம்பெரும் தயாரிப்பாளர் ஒருவர் நேற்றிரவு ஷங்கரை நேரில் சந்தித்து ஒருசில அறிவுரைகளை கூறினாராம். ரஜினியின் லிங்கா போலா சோலோவாக ‘ஐ’ ரிலீஸ் செய்தால்தான் அதிகபட்ச வசூலை பெற முடியும் என்றும் குறிப்பாக அஜீத், விஜய் போன்ற பெரிய ஸ்டார்களின் படத்துடன் மோதவேண்டாம் என்றும் அறிவுரை கூறியதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் ஷங்கர் ஒரு தடவை முடிவு எடுத்துவிட்டால் அதை மாற்றும் குணம் அவருக்கு இல்லை. எத்தனை படங்கள் வந்தாலும் பரவாயில்லை. என்னுடைய பிரமாண்டத்திற்கு என்று தனியாக ஒரு கூட்டம் வரும் என்று தன்னம்பிக்கையுடன் கூறி வருகிறாராம்.