நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட ஐந்து மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்த காரணத்தால் தமிழக முதல்வர் ஜெயலலிதா விழாவினை புறக்கணித்துள்ளார். தமிழக அரசின் சார்பிலும், ஜெயலலிதா சார்பிலும் யாரும் விழாவில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தை போலவே மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் பிரதமர் பதவியேற்பு விழாவை புறக்கணித்துள்ளார். தேர்தலுக்கு முன்பே மம்தா பானர்ஜியும், நரேந்திர மோடியும் ஒருவரை ஒருவர் பகிரங்கமாக தாக்கி விமர்சித்தது தெரிந்ததே.
கேரள முதல்வர் உம்மன்சாண்டி மற்றும் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகிய இருவரும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் பிரதமர் விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை என்று விளக்கம் கூறியுள்ளனர். கர்நடக முதல்வர்சித்தராமையாவும் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார்.
ஐந்து முதல்வர்கள் எதிர்ப்புடன் இன்று மாலை பிரதமர் பதவியேற்பு விழா புதுடெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடக்கவுள்ளது.