மும்பை வெள்ள பாதிப்பு: களத்தில் இறங்குகிறது கப்பல்படை
மும்பையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக மும்பையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் சேதமடைந்துவிட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையே ஒரு தீவுபோல் காட்சி அளிப்பதால் ஒரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்று மீட்புப்பணிகளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய கப்பல்படை ஐந்து மீட்பு குழுவை மும்பைக்கு அனுப்பியுள்ளது. மேலும் இரண்டு நீச்சல் குழுவினர்களும் அனுப்பப்பட்டுள்ளனர். இந்த தகவலை கப்பல்படை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது
வெள்ளத்தில் தத்தளிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதில் இவர்களின் பங்கு முக்கியமாக இருக்கும். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கண்ட்ரோல் ரூமுக்கு நேரடியாக வந்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது