பிளிப்கார்ட் இணையதளம் மூடப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்

flipkartஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஜாம்பவானாக திகழும் பிளிப்கார்ட் நிறுவனம் இந்த ஆண்டோடு தனது இணையதளத்தை மூட முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. வெப்சைட் மூலமும், மொபைல் ஆப்ஸ் மூலம் தற்போது வணிகம் செய்து வரும் பிளிப்கார்ட், இனி அடுத்த ஆண்டில் இருந்து மொபைல் ஆப்ஸில் இருந்து மட்டுமே வர்த்தக்கம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

பிளிப்கார்ட் இணையதளத்தில்  அதிகரித்து வரும் ஷாப்பிங் காரணமாக இணையதளத்தில் டிராபிக் அதிகமாகி அடிக்கடி ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுவதால் சில சமயம் வாடிக்கையாளர்கள் சோர்வடைந்து விடுகின்றனர். இதன் காரணமாக அவர் வேறு ஆன்லைன் நிறுவனத்திற்கு சென்றுவிடுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளதே இந்த அதிரடி மாறுதலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

தற்போது மொபைல் ஆப்ஸ் வழியாக மட்டுமே20 கோடிக்கும் அதிகமான பொருட்களை 30 ஆயிரம் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்து வரும் பிளிப்கார்ட் இனிமேல் முற்றிலும் மொபைல் ஆப்ஸ் மூலம் தனது வணிகத்தை மாற்றினால் இன்னும் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,. பிளிப்கார்ட்டுக்கு இந்தியாவில் மட்டும் 24 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

மாதத்திற்கு 8 கோடி ஆர்டர்களை வினியோகித்து வரும் பிளிப்கார்ட்டுக்கு 3ல் 2 பங்கு ஆன்லைன் டிராபிக் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து மட்டுமே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply