ஒரே நாளில் ரூ.600 கோடி வர்த்தகம். பிளிப்கார்ட் நிறுவனம் மீது நடவடிக்கையா?

flipkartபிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் என்ற  நிறுவனத்திடம் ,அதன் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடவடிக்கை எதுவும் நடைபெறவில்லை என மத்திய அமலாக்கத் துறை இன்று விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 6 ஆம் தேதி பிளிப்கார்டு நிறுவனம் அகில இந்திய அளவில் அதிக சலுகைகளை வாரி வழங்கி ஆன்லைன் மூலம் பல்வேறு பொருட்களை  ரூ.600 கோடி அளவிற்கு விற்பனை செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள சிறிய மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்கள் மத்திய அரசிடம் புகார்கள் கொடுத்தன. இது போன்ற நிறுவனங்கள் மூலம்   பல லட்சம் வணிகர்கள் மற்றும் வணிகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், எனவே மத்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்  அந்த புகார்களில் கூறப்பட்டிருந்தன.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமன்  இதுகுறித்து கூறுகையில், “பிளிப்கார்டு நிறுவனம் தொடர்பாக நிறைய புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து  ஆன் லைன் நிறுவனங்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மின்னணு வர்த்தகம் குறித்து மத்திய  அரசின் கொள்கையை தெளிவுபடுத்த தேவை உள்ளதா என்பது பற்றி விரைவில் ஆலோசிக்கப்படும்” என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்திடம் விசாரணை எதுவும் நடத்தவில்லை என்று மத்திய அமலாக்கத்துறை கூறி உள்ளது

Leave a Reply