நார்மல் டெலிவரியில் 6.5 கிலோ எடை குழந்தை. அமெரிக்க பெண் சாதனை

babyசாதாரணமாக ஒரு குழந்தை 2 முதல் 3 கிலோ எடையில் பிறக்கும். ஆனால் அமெரிக்காவில் உள்ள புளோரிடோ மாகாணத்தில் ஒரு தாய் 6.5 கிலோ எடையில் ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதுவும் அவர் அந்த குழந்தையை நார்மல் டெலிவரியில் பெற்றெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புளோரிடோ மாகாணத்தில் உள்ள மாக்ஸ்ஸ்ண்ட்ரா போர்ட் என்ற தாய், சமீபத்தில் கர்ப்பமானபோது மருத்துவமனையில் சோதனையை மேற்கொண்டார். அப்போது அவருடைய வயிறு மிகவும் பெரிதாக இருந்ததால் இரட்டை குழந்தையாக இருக்கலாம் என அவர் எண்ணியதாக தெரிகிறது.

baby 1

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வயிற்றில் இருப்பது ஒரே ஒரு குழந்தைதான் என்பதை உறுதி செய்தனர். ஆனால் குழந்தை கண்டிப்பாக 5 கிலோவுக்கும் மேல் இருக்கும் என அவர்கள் கணித்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவருக்கு டெலிவரி ஆனபோது குழந்தையின் எடை 6.5 கிலோவாக இருந்ததை அறித்து அனைவரும் அதிசயம் அடைந்தனர். இவருக்கு ஏற்கனவே ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1955ஆம் ஆண்டு இத்தாலி நாட்டை சேர்ந்த ஒரு பெண் 10.22 கிலோ எடையில் ஒரு குழந்தையை பெற்றெடுத்ததுதான் கின்னஸ் சாதனையாக இருந்து வருகிறது. இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்ல்லை.

Leave a Reply