டிசம்பர் முதல் டிரோன்களுக்கு இந்திய அரசு அனுமதி

டிசம்பர் முதல் டிரோன்களுக்கு இந்திய அரசு அனுமதி

தற்போது நாடு முழுவதும் டிரோன்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் உள்ள நிலையில் வரும் டிசம்பர் முதல் தொழில்சார்ந்த டிரோன்களுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ரியல் எஸ்டேட், மின்சார, விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவகளுக்காக டிரோன்கள் பயன்படுத்தி கொள்ள வரும் டிச்மபர் 1 முதல் அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் அதிகபட்சம் 400 அடிகள் உயரம் மட்டுமே டிரோன்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிரோன்கள் மூலம் வீடுகளுக்கு பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களை கொண்டு செல்லும் அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply