இந்தியாவை பின்பற்றுங்கள். பாகிஸ்தான் அரசுக்கு எம்.பி அறிவுரை
பாரத பிரதமர் நரேந்திரமோடி கருப்பு பணத்தை ஒழிக்க அதிரடியாக கடந்த 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு அடுத்த வினாடியோ கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருந்த கருப்புப்பணம் குப்பையானது. கருப்புப்பணத்திற்கு முடிவு கட்டும் வகையில் அமைந்துள்ள பிரதமரின் அறிவிப்புக்கு நாடு முழுவதும் பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. ஒருசிலர் மட்டுமே சில சங்கடங்கள் காரணமாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கருப்புப்பணத்தை ஒழிக்க இந்தியா எடுத்த நடவடிக்கையை போல பாகிஸ்தானிலும் ரூ.1,000 மற்றும் ரூ.5,000 நோட்டுகளை வாபஸ் பெற வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்பி ஒஸ்மான் சைபுல்லாகான் நேற்று பாராளுமன்றத்தில் பேசினார்.
மேலும் பாகிஸ்தான் மக்களை ரொக்க பணப் புழக்கத்தை குறைத்து, நேரடியாக வங்கிகள் மூலம் பணபரிவர்த்தனை செய்ய பழக்க வேண்டும் என்றும் அவர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஒஸ்மான் சைபுல்லாகான் வேண்டுகோளுக்கு பாகிஸ்தான் அரசு செவிசாய்க்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.