நமது உணவுமுறை தான் ஏறத்தாழ 70% உடல் எடை அதிகரிக்க காரணமாக இருக்கிறது. இது போக உட்கார்ந்தே வேலை செய்யும் முறை மற்றும் உடற்பயிற்சி இல்லாதது உடல் எடை அதிகரிக்க ஏனைய காரணங்கள் ஆகும். உணவு பழக்கத்தை சரியாக பின்பற்றி வந்தாலே உடல் எடையை கட்டுக்குள் வைத்துவிடலாம்.
பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கும் ஜூஸ்களில் சேர்க்கப்படும் ஃபிளேவர்கள் மற்றும் செயற்கை சர்க்கரை உடலில் கலோரிகள் அதிகரிக்க செய்து உடல் எடை பெருக காரணியாக இருக்கிறது. இதற்கு மாற்றாக வீட்டிலேயே காய்கறிகளை கழுவி நறுக்கி நீரில் வேக வைத்து சூப் அல்லது ஜூஸ் போன்று பருகுவது உடலுக்கு வலு சேர்க்கும் மற்றும் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும்.
பெரும்பாலும் நாம் மைதா பிரெட்டை தான் உண்கிறோம். இதில் கலோரிகள் அதிகம் மற்றும் செரிமானம் ஆவதும் கடினம். இதற்கு மாற்றாக நீங்கள் கோதுமை பிரெட்டை உண்ணலாம்.
மாலை வேளைகளில் வறுத்த உணவுகளை உண்பதற்கு மாற்றாக வேக வைத்த காய்கறிகளை உண்ணுங்கள். இது கொழுப்பை குறைக்கவும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவும் உதவுகிறது.
வடா பாவ்வில் கொழுப்பு இருக்கிறது,மேலும் மைதா செரிமானம் ஆக கடினமான உணவு. இட்லி சாம்பார் சிறந்த காலை உணவு மற்றும் கொழுப்பு இல்லை. எனவே, இதை தேர்வு செய்யுங்கள். காலை வேளையில் எண்ணெய் குறைவான உணவை உட்கொள்வதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். இது உடல் எடை அதைகமாக முக்கிய காரணமாக திகழ்கிறது.
பால் கலப்பு உள்ள சாக்லேட்களுக்கு மாற்றாக டார்க் சாக்லேட்கள் உட்கொள்ளுங்கள். ஏனெனில், பால் காலப்புள்ள சாக்லேட்களை விட டார்க் சாக்லேட்களில் சர்க்கரை அளவு 50% குறைவு. இது உடல் எடையை குறைக்க உதவும்.
வறுத்த அல்லது பதப்படுத்தி பாக்கெட்டுகளில் விற்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ்களில் சுவையை விட கொழுப்பு அதிகம். எனவே, இதற்கு மாற்றாக சோளம் போன்ற கொழுப்பு சத்து இல்லாத உணவை உட்கொள்ளுங்கள். இது உடற்சக்தி அதிகரிக்கவும் உதவும்
அனைத்து ஐஸ் க்ரீம்களிலும் செயற்கை ஃபிளேவர்கள் மற்றும் செயற்கை சர்க்கரை கலப்பு உள்ளது. இவை உடலில் வேகமாக கொழுப்பு அதிகரிக்க காரணியாக இருக்கின்றன.இதற்கு மாற்றாக நீங்கள் தயிரை உட்கொள்ளலாம். இதனால் உடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களும் கிடைக்கிறது.
நாம் மேற்கூறியவாறு சோடா பானங்களிலும் கூட செயற்கை சர்க்கரை அளவு மிகவும் அதிகம். மேலும் நாளப்பட இது நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணியாக இருக்கிறது. எனவே, இதற்கு மாற்றாக நீங்கள் எலுமிச்சை சாறு பருகலாம்