சாக்லெட்டைப் பார்த்தாலே அனைவருக்கும், அதை சாப்பிட வேண்டுமென்று மனமானது குதூகலப்படும். ஆனால் உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருமானால், இதனை சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஏனெனில் சாக்லெட்டானது தலைவலியை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களில் ஒன்று.
ஆல்கஹாலானது நேரடியாக தலைவலியை தூண்டாது. மாறாக அது உடலில் வறட்சியை ஏற்படுத்தி, அதன் காரணமாக தலைபாரத்தை ஏற்படுத்தும். அதனால் தான் ஆல்கஹால் அருந்திய பின்னர் தலையானது கடுமையாக வலிக்கின்றனது.
நிறைய மக்கள் தலை வலிக்கும் போது காபி குடித்தால், தலைவலி குணமாகும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் காபியை அளவாக குடித்தால் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஆனால் அதையே அளவுக்கு அதிகமாக குடித்தால், அது கடுமையான தலைவலியை உண்டாக்கும்.
பொதுவாக அதிக அளவில் குளிர்ச்சியுடன் இருக்கும் உணவுப் பொருட்கள் தலைவலியை ஏற்படுத்தும். அதில் ஒன்று தான் ஐஸ்க்ரீம். அதிலும் இவற்றில் உள்ள அதிகப்படியான குளிர்ச்சியானது நரம்புகளை பாதித்து, தாங்க முடியாத தலைவலியை ஏற்படுத்தும்.