பிரிட்டனில் வரலாறு காணாத அளவில் கடுங்குளிர் மற்றும் பனிப்புயல் வீசி வருவதால் அந்நாட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
சாலையெங்கிலும் பனிக்கட்டிகள் உறைந்து இருப்பதால் பெருமளவு விபத்துக்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும், ஓட்டுனர்கள் மிகவும் கவனமாக சாலையில் செல்ல பிரிட்டன் அரசு அறிவுறுத்தியுள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டன் உள்பட நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து கிளம்பயிருந்த விமானங்கள் ஒத்தி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. பல முக்கிய நகரங்களில் ரயில்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் உள்ள பனிக்கட்டிகளை அகற்றுவதில் மீட்புப்படையினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் ஒருசில இடங்களில் மின்சார தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியிருப்பதால் பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர். நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என சுற்றுச்சூழல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.