வியட்நாம் நாட்டில் பரபரப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வியட்நாம் நாடு தைரியமாக நேற்று கால்பந்து போட்டி ஒன்றை நடத்தியுள்ளது.
வியட்நாம் நாட்டிலுள்ள நாம்தின் என்ற நகரில் உள்ள கால்பந்து அரங்கில் நேற்று நடைபெற்ற போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர் ஒவ்வொரு பார்வையாளர்களும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே அரங்கத்திற்குள் அனுமதிக்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஐபிஎல் போட்டி, ஒலிம்பிக் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் உலகம் முழுவதும் நடைபெறவில்லை என்ற் நிலையில் வியட்நாம் கால்பந்து போட்டிகளை நடத்தியுள்ளது ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது