இளைஞர்களுக்காக 1500 பல்நோக்கு திறன் பயிற்சி நிறுவனங்கள்

1376909177_20570

இளைஞர்களுக்காக 1500 பல்நோக்கு திறன் பயிற்சி நிறுவனங்கள்

2016-17-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிப்பில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கல்வி, வேலை வாய்ப்பு திறன் வளர்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

கல்வி, திறன்கள் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம் பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிவுப்புகள்:

* தேசிய திறன் மேம்பாட்டு இயக்கம் 76 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.

* 1500 பல்நோக்கு திறன் பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்.

* கல்வி சார்ந்த மின்னணு சான்றிதழ்கள் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் ஒரே இடமாக செயல்படுவதற்காக டிஜிட்டல் அடிப்படை சேமிக்கும் அமைப்புகள் உருவாக்குதல்.

* பிரதமர் திறன் மேம்பாட்டு திட்டத்தின்படி அடுத்த மூன்றாண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கும் நோக்கம்.

* அனைத்து புதிய ஊழியர்களுக்கும் முதல் மூன்றாண்டுகளுக்கு 8.33 சதவீத ஊழியர் வருங்கால வைப்பு நிதி பங்கினை அரசே வழங்கும் திட்டம்.

ஆகியவற்றை அறிவித்துள்ளார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி

Leave a Reply