அமெரிக்காவை சேர்ந்த பிரபல இணையதளம் உலக அளவில் இருக்கும் பெரும் கோடீஸ்வரர்கள் குறித்த சர்வே ஒன்றை சமீபத்தில் எடுத்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் முகேஷ் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கம்போல் இந்த ஆண்டும் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரகள் பட்டியலில் மைக்ரோசாப்ட் உரிமையாளர் பில்கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு 4 லட்சத்து 91 ஆயிரத்து 40 கோடி ரூபாய் சொத்துக்கள் சொந்தமாக உள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 90 பேர்களும், சீனாவை சேர்ந்தவர்கள் 71 பேர்களும் இடம்பிடித்து உள்ளனர்.
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 39வது இடத்தில் உள்ளார். கடந்த வருடம் அவர் 39வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உலக அளவில் சிவ நாடார் 66வது இடத்திலும், இந்துஜா சகோதரர்கள் 69வது இடத்திலும், லட்சுமி மிட்டல் 82வது இடத்திலும், குமார் மங்கலம் பிர்லா 142வது இடத்திலும், கவுதம் அதானி 208வது இடத்திலும், சுனில் மிட்டல் 208வது இடத்திலும், அனில் அம்பானி 418வது இடத்திலும், உள்ளனர்.