ஆசியாவின் 50 பணக்காரர்களின் பட்டியல். அனில் அம்பானி குடும்பம் 3வது இடம்.
இந்திய அளவில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக விளங்கி வரும் அனில் அம்பானி, ஆசியாவின் 50 பணக்காரர்களில் ஒருவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டின் ஆசிய பெரும் பணக்காரர்களின் பட்டியல் ஒன்றை ஃபோர்ஸ் நிறுவனம் எடுத்தது. இந்த பட்டியலில் அனில் அம்பானி குடும்பம் 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல் ஐம்பது இடங்களில் பெரும்பாலும் இந்தியா, சீனாவை சேர்ந்தவர்களே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவை சேர்ந்தவர்கள் 25 பேர்களும், இந்தியாவை சேர்ந்தவர்கள் 14 பேர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.
இந்தியாவின் அனில் அம்பானி குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு 21.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (இந்திய ரூபாயில் சுமார் 1.3 லட்சம் கோடி) உள்ளது. இவர்களுக்கு அடுத்தப்படியாக, 17 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1.1 லட்சம் கோடி) நிகர சொத்து மதிப்புடன் அசிம் பிரேம்ஜி குடும்பம் 7வது இடத்தையும், 14.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் சுமார் 96 ஆயிரம் கோடி) நிகர சொத்து மதிப்புடன் டாடா குடும்பம் 10வது இடத்தையும் பிடித்துள்ளன.
கோத்ரேஜ், பிர்லா, பஜாஜ் ஆகிய குடும்பங்கள் முறையே 15, 22, 29வது இடங்களை பிடித்துள்ளன. ஸ்ரீ சிமெண்டின் சங்கர் குடும்பம் 42வது, ஜிண்டால் குடும்பம் 43வது, முஞ்சாய் குடும்பம் 46வது, சிப்லாவின் ஹமீட்ஸ் குடும்பம் 50வது இடத்தையும் பிடித்துள்ளன. இதேபோல், ஆசிய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் சாம்சங் குழுமம் முதல் இடத்தில் உள்ளது. 2014 ஆம் ஆண்டில் இந்த குழுமத்தின் மொத்த வருவாய், தென்கொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 22 சதவீதமாக உள்ளது.
ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் முதல் 10 இடத்தை பிடித்தவர்களின் பட்டியல் இதோ:
1) Lee from South Korea (Samsung): US$26.6 billion
2) Lee from Hong Kong (Henderson): $24.1 billion
3) Ambani from India (Reliance): $21.5 billion
4) Chearavanont from Thailand (Charoen Pokphand): $19.9 billion
5) Kwok from Hong Kong (Sun Hung Kai): $19.5 billion
6) Kwek/Quek from Singapore, Malaysia (Hong Leong): $18.9 billion
7) Premji from India (Wipro): $17 billion
8) Tsai from Taiwan ( Cathay Financial): $15.1 billion