6.5 லட்சம் கார்களை போர்டு நிறுவனம் திரும்ப பெறுவது ஏன்?
கார் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றாகிய போர்டு நிறுவனம் அமெரிக்காவில் விற்பனை செய்த 6.50 லட்சம் கார்களை திரும்பப் பெற்று வருவதாக திடீரென அறிவித்துள்ளது.
ஃபோர்டு நிறுவனம் கடந்த 2013 முதல் 2016 வரை விற்பனை செய்த ஃபியூஷன், மாண்டியோ, லிங்கன் எம்கேஇசட் ஆகிய மாடல் கார்களில் உள்ள சீட்பெல்ட் சரியாக வேலை செய்யவில்லை என்றும், விபத்து நேரத்தில் சீட் பெல்ட் போட்டிருந்தாலும் அதில் பயணம் செய்பவர்களுக்கு காயம் ஏற்படுவதாகவும் புகார் கூறப்பட்டது.
ஆதாரத்துடன் வெளிவந்த இந்த புகார் காரணமாக ஃபோர்டு நிறுவனம் தற்போது சர்ச்சையை தவிர்க்கும் பொருட்டு 6.50 லட்சம் கார்களை திரும்பப் பெற சம்மத்தித்துள்ளது.