அனுஷ்கா தற்போது பாஹுபாலி திரைப்படத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வருகிறார். முதல் பாதி ராணாவுடனும், இரண்டாவது பாதியில் பிரபாஸுடனும் நடித்து வரும் அனுஷ்கா, இரண்டாவது பாதியில் கர்ப்பிணீயாக நடிப்பதாக கூறப்படுகிறது.
அனுஷ்காவின் கர்ப்பிணி காட்சிகளை கடைசியில் எடுத்து கொள்ள இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி முடிவு செய்திருந்ததால், கர்ப்பிணி காட்சிகள் தவிர மற்ற அனைத்து காட்சிகளையும் கிட்டத்தட்ட இயக்குனர் முடித்துவிட்டார்.
அனுஷ்கா நடிக்க இருக்கும் கர்ப்பிணி வேடத்திற்கு மேக்கப் செய்ய வெளிநாட்டு மேக்கப்மேன்களை வரவழைத்து இருக்கிறார் இயக்குனர். இந்திய திரைப்படங்களில் இதுவரை வராத அளவிற்கு கர்ப்பிணி வேடம் இருக்கவேண்டும் என்பது ராஜமெளலியின் எதிர்பார்ப்பு. கர்ப்பிணி வேடத்தில் சிறப்பாக நடிக்க ஹாலிவுட்டில் கர்ப்பிணியாக நடித்த நடிகைகளின் திரைப்படங்களை பார்க்குமாறு அனுஷ்காவிடம் இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.