அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘தல 56’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
கொல்கத்தா படப்பிடிப்பை அடுத்து துபாய் மற்றும் மஸ்கட் ஆகிய இடங்களில் சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் லோகேஷன்களை முடிவு செய்ய துபாய் சென்றுள்ளார். மேலும் இங்கு நடைபெறும் சண்டைக்காட்சிகளுக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்களை பயன்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக ஹாலிவுட் சண்டைப்பயிற்சிகளிடம் ஏ.எம்.ரத்னம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் அஜீத்துடன் வெளிநாட்டு ஸ்டண்ட் கலைஞர்கள் மோதும் சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது. அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், கபீர்சிங் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.