அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் தூக்கில் தொங்கி தற்கொலை
சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக பதவி விலகிய அருணாச்சல பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கலிக்கோ புல், இட்டா நகரில் உள்ள தனது வீட்டில் இன்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சி கவிழ்ந்த பின்னர் முதல்வர் பதவியேற்றர் கலிக்கோ வெறும் 6 மாதங்கள் மட்டுமே முதல்வர் பதவியில் நீடித்திருந்தார். கலிக்கோ புல்லின் ஆட்சி சட்டவிரோதமானது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்ததை அடுத்து, சுப்ரீம் கோர்ட் காரணமாக கலிக்கோ புல் சில வாரங்களுக்கு முன் முதலமைச்சர் பதவில் இருந்து விலக நேர்ந்தது.
ஆட்சி பறிபோனதில் இருந்து தொடர்ந்து மனஅழுத்தத்துடன் காணப்பட்ட கலிக்கோ, இன்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இட்டாநகரில் தூக்கில் தொங்கிய அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.